உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீம்பு அறிவிப்பால் ஆட்டம் காணும் பாக் மருந்து துறை | Pakistan Medicine | Medicine Import

வீம்பு அறிவிப்பால் ஆட்டம் காணும் பாக் மருந்து துறை | Pakistan Medicine | Medicine Import

2733 மெடிக்கல் எமர்ஜென்சியை நோக்கி பாக் இந்தியாவை பகைத்ததால் வந்த வினை? டிஸ்க்: வீம்பு அறிவிப்பால் ஆட்டம் காணும் பாக் மருந்து துறை | Pakistan Medicine | Medicine Import காஷ்மீர் பஹல்காம் தாக்குதலையடுத்து பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது, எல்லைகளை மூடுவது, பாகிஸ்தானியர்களுக்கு விசா நிறுத்தல் உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. அதில் ஒன்று இந்தியா உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு. இதனால் அந்த நாட்டில் மருந்து விநியோக சங்கிலி பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானின் மருந்து தேவையில் சுமார் 30 முதல் 40 சதவிதம் வரையில் இந்தியாவை நம்பியே உள்ளது. குறிப்பாக மருந்து சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்களும் இதில் அடங்கும். மிக முக்கியமாக புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் சீரம், குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளதால் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை பெற அவசரகால தயார்நிலை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் அவசரகால நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் உறுதி செய்துள்ளது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை