பாக் உள்ளே புகுந்து இந்தியா செய்தது என்ன? | Operation sindoor | Pakistan Minister
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் 80 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது. குறிப்பாக பயங்கரவாத முகாம்கள், பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், அவர்கள் அறிவிப்பு வெளியிடும் மசூதி துல்லியமாக ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களின் பட்டியலையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கோட்லி,முரித்கே,பகவல்பூர், சக் அம்ரு, பிம்பர், குல்பூர், சியால்கோட், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் இரண்டு இடங்கள் என 9 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இரண்டாவது இடமான முரித்கே என்பது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடமாகும். அந்த இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பகவல்பூர் பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. Breath இந்தியா தரப்பில் வீடியோ ஆதாரங்களுடன் தாக்குதல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாங்களும் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம் என பாகிஸ்தான் சொல்கிறது. பாகிஸ்தான் விமானப்படை ஐந்து இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இரண்டு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் சொல்கிறார். ஜெட் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது விரோத செயல் அல்ல என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார்