குறிப்பிட்ட இனத்தவரை மட்டும் குறிவைத்து கொன்ற கொடூரம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், முசகேல் மாவட்டத்தில் பலுசிஸ்தான் - பஞ்சாபை இணைக்கும் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். வாகனங்களின் வந்தவர்களின் அடையாள அட்டைகளை பார்த்து, பஞ்சாபை பூர்விகமாக கொண்ட குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை மட்டும் தனியாக அழைத்துசென்று சுட்டு கொன்றுள்ளனர். 10 லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்தனர். லாரி டிரைவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதே போல் கலாட் மாவட்டத்தில் 4 போலீசார், 5 வழிபோக்கர்கள் என 9 பேரை தீர்த்து கட்டினர். மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர். போலனில் தண்டவாளத்தை தகர்த்தனர், மஸ்துங்கில் காவல்நிலையம் தாக்கப்பட்டது. குவாதரில் வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பாலுசிஸ்தான் விடுலை ராணுவம் பொறுப்பேற்றது. இன்னும் பல தாக்குதல்கள் நடக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.