விண்ணை பிளந்த அரோகரா கோஷம் Palani Temple | Flag hoisting | Thaipusam 2025
பழநி தைப்பூச திருவிழா கோலாகல துவக்கம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி பழநி தண்டாயுதபாணி கோயிலில் இந்தாண்டு தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம் வெகு விமர்சியாக நடந்தது. அங்குள்ள கொடிகட்டி மண்டப கொடிமரத்தில் நிலா, சூரியன், வேல், மயில் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி சிறப்பு பூஜைகள் செய்து ஏற்றப்பட்டது. அறங்காவலர்கள், இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
பிப் 05, 2025