உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனி முருகன் கோயிலில் நடந்த சம்பவம்; பக்தர்கள் அதிர்ச்சி | Palani Temple | Murugan Temple

பழனி முருகன் கோயிலில் நடந்த சம்பவம்; பக்தர்கள் அதிர்ச்சி | Palani Temple | Murugan Temple

முருகனின் அறுபடை வீடுகளில் 3வது படை வீடு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2023 ஜனவரி 27ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதம் ஏற்பட்டுள்ளது. ராஜ கோபுரம் உச்சியில் இரண்டு புறமும் கொம்பு போல உள்ள அமைப்பில் ஒரு பகுதி உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ