/ தினமலர் டிவி
/ பொது
/ பைக்கை திருடிய ஆசாமி ஓனரை பார்த்து மிரண்ட தருணம் | Palladam bike theft | palladam police
பைக்கை திருடிய ஆசாமி ஓனரை பார்த்து மிரண்ட தருணம் | Palladam bike theft | palladam police
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். பைக் மெக்கானிக். இவர், வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கை 2 ஆசாமிகள் இன்று காலை திருடிச் சென்றனர். தேவராஜ் இன்னொரு பைக்கில் திருட்டு ஆசாமிகளை விரட்டிச் சென்றார். டேய் வண்டியை நிறுத்திடு: என் கையில மாட்டுன உன்னை அடி வெளுத்திடுவேன் என கத்தியபடி தேவராஜ் விரட்டி வருவதைப் பார்த்ததும் திருடர்கள் மிரண்டு போனார்கள். பைக்கை வேகமாக ஓட்டி தப்ப முயன்றனர். பதற்றத்தில் முன்னால் சென்ற புல்லட் மீது பைக்கை மோதினர்.
பிப் 18, 2025