உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுவர் ஏறி குதித்து வகுப்பறையை நாறடித்தவர்கள் யார்?

சுவர் ஏறி குதித்து வகுப்பறையை நாறடித்தவர்கள் யார்?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. சுமார் 200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இன்று காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது, 10ம் வகுப்பு அறையில் துர்நாற்றம் வீசியது. வகுப்பறையின், ஜன்னல், சுவர், மாணவர்கள் அமரும் பெஞ்ச் முழுவதும் மனிதக்கழிவு வீசப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர். பள்ளி பூட்டிய பின் சுவர் ஏறி குதித்து நுழைந்து, ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் மனிதக்கழிவு வீசி உள்ளனர்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ