4 வயது குழந்தை சொன்ன பகீர் தகவல் | Pallipalayam | Anganwadi
நாமக்கல், பள்ளிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. தார்காடு பகுதியில் உள்ள பால்வாடியில் ஒரு வருடத்துக்கு முன் சேர்த்துள்ளார். கடந்த மே 3ம் தேதி மதியம் குழந்தையை அழைத்து செல்ல பால்வாடி வந்துள்ளார். அப்போது உள்ளே ஆயம்மா சரஸ்வதி, அவருடைய நண்பர் தேவராஜ் இருந்துள்ளனர். அவர்களிடம் சொல்லிவிட்டு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. மறுநாள் காலை குளிக்க வைத்த போது உடலில் தடிப்புகள் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் என்ன நடந்தது என கேட்டுள்ளார். பால்வடிக்கு வந்த தாத்தா என்னை கடித்து வைத்தார். உடலை தொட்டு பேசினார் என குழந்தை சொன்னது. பதறிப்போன பெற்றோர் பால்வாடிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பற்றி போலீசார் விசாரித்தனர். அவரை அடையாளம் காட்ட ஆயம்மா சரஸ்வதி மறுத்துள்ளார். இதையடுத்து சரஸ்வதி கைது செய்யப்பட்டார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேவராஜ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர். கைது செய்யப்பட்ட சரஸ்வதி நாமக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.