ஆய்வுக்கு பின் அதிகாரி சொன்ன தகவல் | Pamban Bridge | Railway Bridge | Rameswaram
பாம்பன் பாலத்தில் ரயில் எப்போது ஓடும்? பாம்பன் பால பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் தெற்கு ரயில்வே மதுரை மண்டல மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் ஆய்வு செய்தார். பின்பு பேசுகையில், பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் திறக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஆனால் இன்னும் திறப்பு தேதி உறுதி செய்யப்படவில்லை. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளும் முழுமையாக முடிந்த பின் பாம்பன் பால திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் பழைய ரயில்பாலத்தை அகற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றார். அக்டோபர் முதல் பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகிறது.