உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம்பன் தரைவழி பாலத்தின் 12வது தூணில் சேதம் | Rameswaram | Pampan | Flyover | 12th Pillar dama

பாம்பன் தரைவழி பாலத்தின் 12வது தூணில் சேதம் | Rameswaram | Pampan | Flyover | 12th Pillar dama

கடலில் உடைந்து விழுந்த பாம்பன் பாலம் கான்கிரீட் மீனவர்கள் அச்சம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடலில் 1988 அக்டோபர் 2ல் 79 தூண்கள் தாங்கி நிற்கும் சாலை பாலம் திறக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் சாலை பாலம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தினமும் இந்த பாலம் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். மீனவர்களும் இந்த பாலத்தை பயன்படுத்தியே மீன்களை சரக்கு வாகனங்கள் மூலம் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பாலத்தில் போக்குவரத்து தொடங்கி சுமார் 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்போது பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்து வருகின்றன. கனமழை, வழக்கத்திற்கு மாறான கடல் சீற்றத்தால் தூண்களில் அலைகள் வேகமாக மோதுகின்றன. இதனால் 12வது தூணின் கீழ் பகுதியில் உள்ள கான்கிரீட் சிமென்ட் பூச்சு உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி