உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாம்பன் ரயில்வே பாலம்: 11ம்தேதி திறக்க பணிகள் மும்முரம் | Pamban railway bridge | PM modi

பாம்பன் ரயில்வே பாலம்: 11ம்தேதி திறக்க பணிகள் மும்முரம் | Pamban railway bridge | PM modi

பாம்பன் ரயில் பாலம் 11ல் திறப்பு விழா மேடைக்கான பணிகள் ஜரூர் பிரதமர் மோடி பங்கேற்பு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் நிலையம் மற்றும் தூக்கு பாலத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து கடல் பாலம் வரைக்கும் டிராலியில் சென்றும் நடந்து சென்றும் ரயில் பாதையை ஆய்வு செய்தனர். பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அமைச்சர்கள் பங்கேற்பது உறுதி என ரயில்வே அதிகாரிகள் கூறினர். பிரதமர் மோடி திறப்பு விழாவில் பங்கேற்பாரா? என கேட்டதற்கு, அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறினர். திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் 2 நாளில் முடியும்; விழாவில் பிரதமர் மோடி நேரடியாக கலந்து கொள்ள முடியாதபட்சத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவையை துவக்கி வைப்பார் என அதிகாரிகள் கூறினர்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை