அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பட்டா! | Panchami land | OPS | Scheduled Caste Commission
1991ல் தேனி ராஜாகளம் என்ற இடத்தில், 40 சென்ட் பஞ்சமி நிலத்தை மூக்கன் என்பவருக்கு தமிழக அரசு வழங்கியது. அரசிடம் இருந்து பஞ்சமி நிலத்தை பெறும் பட்டியலினத்தவர் 15 ஆண்டுகளுக்கு நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது. அதன்பிறகும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்க முடியும். ஆனால் பட்டியலினத்தை சாராத ஹரிசங்கர் என்பவருக்கு 2008ல் மூக்கன் எழுதி கொடுத்துள்ளார். ஹரிசங்கரிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தன் பெயரில் பட்டா வாங்கியுள்ளார். சட்டத்தை மீறி பட்டா கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மூக்கனின் மகன்கள் பாலகிருஷ்ணன், முத்துமணி மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்தனர். ஆணையம் விசாரித்தது. பன்னீர்செல்வம் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பஞ்சமி நிலத்திற்கு பட்டா பெற்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.