உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவுன்சிலரிடம் செல்போனில் சண்டை போட்ட பேரூராட்சி தலைவர் | Panchayat president | Cellphone audio rel

கவுன்சிலரிடம் செல்போனில் சண்டை போட்ட பேரூராட்சி தலைவர் | Panchayat president | Cellphone audio rel

திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி. திமுகவை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். இதில் தனக்கும் பங்கு வேண்டும் என சாமலாபுரம் 13வது வார்டு உறுப்பினர் பெரியசாமி கேட்டுள்ளார். ஆனால் பாதி பணத்தை பேரூராட்சி செயலாளருக்கு கொடுத்துவிட்டதாக பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஒன்றரை கோடி செலவு செய்து தான் தலைவராகி உள்ளேன். நானும் சம்பாதிக்க வேண்டும். நாலு காசு பார்க்க வேண்டும் என்ற ரீதியில் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி