/ தினமலர் டிவி
/ பொது
/ பந்தலுாரில் ஆட்டம் காட்டும் யானை! பணிகள் புறக்கணிப்பு | Pandalur | Pandalur Elephant | Strike
பந்தலுாரில் ஆட்டம் காட்டும் யானை! பணிகள் புறக்கணிப்பு | Pandalur | Pandalur Elephant | Strike
நேற்றும் 8 வீடுகள் டமார்! இதுவரை 38 வீடுகள் புல்லட்டை பிடிக்க 2வது நாளாக போராட்டம் நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு பகுதிகளில் சில மாதங்களாக புல்லட் என அழைக்கப்படும் ஆண் யானை மக்களை அச்சுறுத்தி வந்தது. இரவில் வரும் இந்த யானை வீடுகளை இடித்து, உணவு பொருட்களை ருசி பார்ப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மட்டும் ஏழு வீடுகளை இடித்து, அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிட்டு சென்றது. வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் சேரங்கோடு பகுதியில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டேட் மேலாளர் ஆய்வு செய்ய கூட வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
டிச 19, 2024