உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணவு தேடி வீட்டு கதவை தட்டும் யானையால் பீதியில் பழங்குடியினர்

உணவு தேடி வீட்டு கதவை தட்டும் யானையால் பீதியில் பழங்குடியினர்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள தட்டாம்பாறை, கோட்டைப்பாடியில் கடந்த 1 மாதமாகவே யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளது. நேற்றிரவு புல்லட் என்ற ஆண் யானை கோட்டைபாடி பழங்குடியின கிராமத்திற்குள் நுழைந்தது. மேதி என்ற பெண்ணின் வீட்டு சுவரை இடித்தது. உள்ளே இருந்த டிவி, சேர் உள்ளிட்ட பொருட்களை தூக்கிபோட்டு சேதப்படுத்தியது. வீட்டுக்குள் இருந்த மேதியும், அவரது 2 பேத்திகள் மரண பீதியில் உறைந்தனர். வீட்டின் கதவை யானை உடைத்தபோது, அவர்கள் மூவரும் வீட்டின் பின்பக்க கதவு வழியாக தப்பி அருகே உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தால் உயிர் தப்பினர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ