உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பரமக்குடி வக்கீல் சம்பவம்: 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி | Paramakudi Lawyer Murder | Police

பரமக்குடி வக்கீல் சம்பவம்: 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி | Paramakudi Lawyer Murder | Police

பரமக்குடியில் வழக்கறிஞர் சாய்ப்பு பிசினஸ்மேன் பேமிலிக்கு தொடர்பா? 3 ஆசாமிகள் பரபர வாக்குமூலம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரவாண்டி வலசை கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகன் உத்திரகுமார் 35. வழக்கறிஞர். சென்னையில் வசித்து வந்தார். சில மாதங்களாக பரமக்குடியில் உள்ள கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 ஆசாமிகள் உத்திரகுமார் வெட்ட முயன்றனர். அலறியடித்து ஓடிய அவரை விரட்டிச் சென்று சரமாரி வெட்டி தள்ளியது. சம்பவ இடத்திலேயே உத்திரகுமார் இறந்தார். உத்திரகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்தனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, வண்டி நம்பரை கண்டுபிடித்தனர். அந்த வண்டி பரமக்குடி அருகே உள்ள செக்போஸ்ட்டை கடந்தபோது, அதை போலீசார் விரட்டிச் சென்றனர். வண்டியை ஓட்டிய தீனதயாளனை பிடித்து விசாரித்தபோது, தானும் 2 நண்பர்களும் சேர்ந்து உத்தரகுமாரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, பரமக்குடியில் பதுங்கியிருந்த அப்துல் கலாம், கிரண் ஆகிய மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் தீனதயாளனும், உத்திரகுமாரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இருவருக்கும் யார் பெரிய ஆள் என்பதில் முன் பகை இருந்தது தெரிய வந்தது. அதனால் கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலம் அளித்தனர். ஆனாலும், அதை அப்படியே நம்பிவிடாமல் இன்னொரு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பழனிசாமி என்பவருடன் சேர்ந்து உத்திரகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். லாபத்தை பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பழனிசாமியை உத்திரகுமாரும், அவரது ஆதரவாளர்களும் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் உத்திரகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த உத்திரகுமார் பரமக்குடியில் அக்கா வசிக்கும் ஏரியாவில் சில மாதங்களுக்கு முன் குடியேறினார். அதனால், பழனிசாமி தரப்பில் யாராவது ரவுடிகளை ஏவி உத்திரகுமாரை கொன்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். பரமக்குடியில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை ராமநாதபுரம் எஸ்பி சந்தீப் மிட்டல் பாராட்டினார்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை