உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 27 நாள் சிறைவாசத்துக்கு பின் வெளியே வரும் மகாவிஷ்ணு Paramporul foundation| Mahavishnu | Bail granted

27 நாள் சிறைவாசத்துக்கு பின் வெளியே வரும் மகாவிஷ்ணு Paramporul foundation| Mahavishnu | Bail granted

சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மகாவிஷ்ணு முறையிட்டார். மாற்று திறனாளிகளை புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் பேசவில்லை. தமது பேச்சு அவர்களை காயப்படுத்தி இருந்தால் நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்கிறேன். தன்னுடைய முழு பேச்சையும் கேட்காமல் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கூறியிருந்தார். ஜாமின் தர போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. மகாவிஷ்ணு சமர்ப்பித்த மன்னிப்பு கடிதம் உள்ளிட்ட ஆவனங்களை பரிசீலித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கினார். முன்னதாக, அசோக்நகர் அரசு பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் உரையாற்றிய மகாவிஷ்ணு, பாவ-புண்ணியம், மறுபிறவி பற்றி பேசினார். உடல் குறைபாடு உடன் பிறப்பது கடந்த பிறவியில் செய்த பாவத்தின் விளைவு எனக்கூறினார். அவர் பேச்சை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் எதிர்த்தார். பள்ளியில் ஆன்மிகம் பற்றி பேசக்கூடாது என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சர்ச்சையானது.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை