உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் | Paris olympic | Manu bhaker | Sarabjot Singh | Win

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் | Paris olympic | Manu bhaker | Sarabjot Singh | Win

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கிறது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழுவினர் 16 வகை விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர். கடந்த ஞாயிறன்று நடந்த மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்ததுடன், ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்த நிலையில் அதே 10 மீட் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கத்தை வென்றிருக்கிறார் மனு பாக்கர்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ