/ தினமலர் டிவி
/ பொது
/ ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசிய கொடியேந்தும் ஸ்ரீஜேஸ் Paris Olympics| Manu bhaker| Sreejesh|
ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசிய கொடியேந்தும் ஸ்ரீஜேஸ் Paris Olympics| Manu bhaker| Sreejesh|
33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ல் தொடங்கியது. 2 வாரங்களாக நடந்த ஒலிம்பிக் போட்டிகள் 11ம் தேதியுடன் முடிகின்றன. 10ம் தேதி நிலவரப்படி, 37 தங்கத்துடன் சீனா முதலிடத்திலும், 34 தங்கத்துடன் அமெரிக்கா 2ம் இடத்திலும், 18 தங்கத்துடன் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் உள்ளன. 5 வெண்கலம் ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியா 69ம் இடத்தில் உள்ளது. இதற்கு மேல் இந்தியாவிற்கு பதக்க வாய்ப்பு ஏதும் இல்லை எனும் நிலையில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் முதல் முறையாக 2 வெண்கலம், நீண்ட இடைவெளிக்குப் பின், தொடர்ந்து அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் ஹாக்கியில் வெண்கலம் என இரு சாதனைகளை எண்ணி, இந்தியா பெருமைப்படும் தருணமாக அமைந்துள்ளது.
ஆக 10, 2024