திமுக பிரமுகர் மகனின் அடாவடியால் பறிபோன உயிர்! Parking Issue | Car Accident
ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அன்னை அரவிந்தர் நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி. 54 வயதான இவர் லேபர் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றி வந்தார். இவருக்கு கிருபாகரன், பாஸ்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சிவமூர்த்தி தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அவ்வழியாக ஆதித்யா என்ற வாலிபர் தனது இரு நண்பர்களுடன் காரில் வந்துள்ளார். ஆதித்யாவின் தந்தை சீனிவாசன் திமுகவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். கார் செல்ல வழி இல்லாததால் ஆதித்யா தொடர்ந்து ஹார்ன் அடித்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிவமூர்த்தியின் மகன்கள் வந்து பைக்கை எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த ஆதித்யா மற்றும் அவரது நண்பர்கள் கட்டையுடன் சிவமூர்த்தி குடும்பத்தினரை தாக்க வந்துள்ளனர்.