உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊருக்கு திரும்ப மாட்டோம்; சென்னையிலே அடக்கம் பண்ணிடுங்க | Part time teachers protest | DPI | CM

ஊருக்கு திரும்ப மாட்டோம்; சென்னையிலே அடக்கம் பண்ணிடுங்க | Part time teachers protest | DPI | CM

ஸ்டாலின் சொன்னதை செய்யணும் இல்லன்னா வேலைய விட்டு தூக்கணும் ஆசிரியர்கள் ஃபைனல் கெடு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் 2012ல் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். 12,500 ரூபாய் சம்பளம் வாங்கும் இவர்கள், பணிநிரந்தரம் கோரி பல ஆண்டாக போராடி வருகின்றனர். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் இன்று 7 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னையிலேயே தங்கி தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். ஸ்டாலின் அளித்த வாக்குறுதியைத்தான் கேட்கிறோம்; இதுவரை அமைச்சர்கள் கூட எங்களிடம் பேச்சு நடத்தவில்லை என ஆசிரியர்கள் ே வதனையுடன் கூறினர். 12,500 ரூபாயை வைத்துக்கொண்டு வாழ முடியாமல் தினம் தினம் சாகிறோம்; பணி நிரந்தரம் பண்ணுங்கள்; இல்லாவிட்டால் எங்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து விடுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். சந்தியா உடற்கல்வி ஆசிரியை கங்கா பரமேஸ்வரி கணினி ஆசிரியர் பணிநிரந்தரம் செய்யும் வரை ஊருக்கு திரும்ப மாட்டோம்; எங்களை இங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் எனவும் சில ஆசிரியர்கள் ஆவேசத்துடன் கூறினர்.

ஜூலை 14, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Neethan K
ஜூலை 15, 2025 20:54

இதே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பள்ளி ஆசிரியர் அமைச்சர் தமிழகம் முழுக்க.. கல்வித்துறை அலுவலகங்களில் நடக்கும் அனைத்து வகை ஊழல்களுக்கும் புரோக்கராக செயல்படுகிறார். சர்வ சாதாரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது


அப்பாவி
ஜூலை 14, 2025 18:18

இடம் எங்கே இருக்கு?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !