இளம் தம்பதிகளுக்கு ம.பி.யில் அதிரடி ஆஃபர் MP|Parusuram Kalyan Board |President|more Children|Rs. 1 l
மத்திய பிரதேச அரசில் பிராமணர் நலன் காக்க பரசுராம் கல்யாண் வாரியம் செயல்படுகிறது. அதன் தலைவராக இருப்பவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா. இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது நாம் குடும்பங்களை கவனிக்க தவறிவிடுவதால் மதவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களிடம் நாம் இனி அதிகம் எதிர்பார்க்க முடியாது. எனக்கு இளைஞர்கள் மீதுதான் மிகுந்த நம்பிக்கை உள்ளது. அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம்தான் இருக்கிறது. இளைஞர்கள் ஒரு குழந்தை போதும் என்கிறார்கள். அவர்கள் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிராமண சமூகத்தின் இளம் தம்பதிகளுக்கு பரசுராம் கல்யாண் வாரியம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். நான் வாரிய தலைவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரிசு வழங்குவேன். கல்விச் செலவு அதிகம் என இளைஞர்கள் கூறுகின்றனர். அப்படி சொல்லாமல் எப்படியாவது சமாளியுங்கள்.