/ தினமலர் டிவி
/ பொது
/ நடுக்கடலில் தவித்த 141 சுற்றுலாப் பயணிகள் | Nagapattinam | Passenger cruise | srilanka
நடுக்கடலில் தவித்த 141 சுற்றுலாப் பயணிகள் | Nagapattinam | Passenger cruise | srilanka
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சுபம் என்ற தனியார் நிறுவனம், பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது. 3 மணிநேரத்தில் இலங்கைக்கு செல்லலாம் என்பதால், இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வெள்ளியன்று இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து நாகைக்கு கப்பல் புறப்பட்டது. 141 பயணிகள் இருந்தனர். கப்பலின் இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. நடுக்கடலில் கப்பல் நின்றது. ஊழியர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை.
மே 10, 2026