அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா; அதிகாரிகள் நடவடிக்கை Aerodon Chopper
பொதுமக்களை கோவளம் முதல் மகாபலிபுரம் வரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று சுற்றி காட்டி வந்தனர். கடந்த 12ம் தேதி முதல் 16 ம் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சுற்றுலாவுக்கு உரிய அனுமதி தரப்பட்டு உள்ளதா? பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி கடிதம் எழுதினர். அதன் அடிப்படையில், அதிகாரிகள் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தி வந்தது தெரிந்தது.
ஜன 15, 2025