/ தினமலர் டிவி
/ பொது
/ குழந்தைகளை கொடூரமாக தாக்கிய பாஸ்டர் கைது | Pastor attack | Childrens | kanniyakumari
குழந்தைகளை கொடூரமாக தாக்கிய பாஸ்டர் கைது | Pastor attack | Childrens | kanniyakumari
2 மகன்களை வீட்டில் விட்டுவிட்டு, பாஸ்டர் கிங்ஸ்லியும் மனைவி சஜினியும் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு ஊழியத்திற்கு செல்வது வழக்கம். கடந்த வியாழக்கிழமையும் மகன்களை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பியபோது, இரு மகன்களும் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் சக குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த கிங்ஸ்லி, கோபத்துடன் மகன்களை வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். ஸ்கிப்பிங் கயிற்றால் இருவரையும் சரமாரியாக அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தைகள் அலறித்துடித்தனர். கணவரை தடுக்க முயன்றார் சஜினி, அவரையும், ஒன்றும் அறியாத 8 மாத கைக்குழந்தையையும் அதே கயிற்றால் தாக்கினார்.
ஜூன் 02, 2025