கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கதை முடித்த மனைவி! | Tenkasi | Pavoorchatram | Pavoorchatram Police
தென்காசி பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்துரை வயது 43. பாபநாசம் அரசு பஸ் கண்டக்டர். வேல்துரை மனைவி உமா. 2 குழந்தைகள் உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சுதாகர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். வேல்துரை தினமும் பைக்கில் பாவூர்சத்திரம் சென்று அங்கு இருந்து பஸ்சில் பணிக்கு செல்வார். திங்கள் கிழமை காலை வேல்துரை பைக்கில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. தூக்கி வீசப்பட்ட வேல்துரை தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காரை ஒட்டி வந்த நபர் தப்பி ஓடினார். பாவூர்சத்திரம் போலீசார் வேல்துரையின் உடலை மீட்டு விசாரித்தனர். காரில் நம்பர் பிளேட் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கார் குறித்து விசாரணை செய்ததில் கார் வேல்துரையின் வீட்டு ஓனர் சுதாகரிடம் இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் காரை ஓட்டி வந்த பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சுதாகர் மனைவி 2 வருடம் முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். சுதாகரின் குழந்தைகளை வேல்துரை மனைவி கவனித்து வந்துள்ளார். இதில் சுதாகர் மற்றும் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் ஆகி உள்ளனர். கள்ளக்காதல் மலர்ந்து ஒரு கட்டத்தில் இது வேல்துரைக்கும் தெரிய வந்துள்ளது. அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். வேல்துரை தடையாக இருந்ததால் தீர்த்து கட்ட சுதாகர் முடிவு செய்துள்ளார். திட்டமிட்டபடி கார் ஏற்றி கொல்ல முடிவு செய்து தனது நண்பரான ஆறுமுகம் உதவியை நாடியுள்ளார். சுதாகர், ஆறுமுகம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த வேல்துரை மனைவியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.