ஏழுமலையான் கோயிலில் மொட்டை போட்ட பவன் மனைவி Pawan Kalyan | Anna Lezhneva
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 2013ம் ஆண்டில் ரஷ்யாவைச் சேர்ந்த நடிகை அன்னா லெஷ்னேவாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மகன் மார்க் ஷங்கர் வயது 7 சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறை பயிற்சி வகுப்புக்காக சென்றார். கடந்த 8 ம்தேதி பயிற்சி முகாம் நடந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க் சங்கருக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவன் அருகில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். தீ விபத்தால் அறை முழுவதும் புகை மண்டலமானது. அதை மார்க் சங்கர் சுவாசித்ததால் நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிங்கப்பூரிலுள்ள மருத்துவமயைில் மார்க் சங்கர் அட்மிட் செய்யப்பட்டான். ஆந்திராவில் பழங்குடி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருந்த பவன் கல்யாணுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.