உலகை வழி நடத்தும் சக்தி இந்தியா: வெளியான ரிப்போர்ட் | Paysecure | UPI
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்பாட்டில் இருக்கும் பண பரிவர்த்தனை நுட்பங்களை பே செக்யூர் Paysecure நிறுவனம் ஆய்வு செய்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகிலேயே முன்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை 81 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான UPI பரிவர்த்தனை நடந்துள்ளது. பே செக்யூர் வெளியிட்ட தரவுகளின் படி, 2022ல் இந்தியாவில் ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 பரிவர்த்தனைகள் நடந்தது.
ஆக 31, 2024