/ தினமலர் டிவி
/ பொது
/ அடிக்கல் நாட்டும் பணிகள் தற்காலிக நிறுத்தம் | DMK | PMK | Pennagaram Bus Stand
அடிக்கல் நாட்டும் பணிகள் தற்காலிக நிறுத்தம் | DMK | PMK | Pennagaram Bus Stand
பென்னாகரம் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் 4 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் பஸ் ஸ்டாண்டு நுழைவு வாயில் தூண், நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. திமுக எம்பி மணி தலைமையில் பூமி பூஜை செய்ய திமுகவினர் திட்டமிட்டனர். இதை அறிந்த பாமகவினரும் அங்கு திரண்டனர். பென்னாகரம் பாமக எம்எல்ஏ ஜிகே மணி தொகுதி நிதியிலிருந்து 39 லட்சம் மதிப்பில் இப்பணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைக்காத சூழலில் எப்படி பூமி பூஜை போட முடியும் என வாக்குவாதம் செய்தனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
செப் 22, 2024