பெண் பழக்கம் காரணமா! எஸ்ஐக்கு நடந்தது என்ன? |Peraiyur Police Station |SI Murugan| Ramanathapuram
ராமநாதபுரம் கமுதி அருகே உள்ள பேரையூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ முருகன் வயது 54. நேற்று இரவு 10 மணியளவில் முருகன் சாதாரண உடையில் உப்பங்குளம் கிராமம் அருகே சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக வந்த அவரை வழிமறித்த 2 பேர் சரமாரியாக தாக்க துவங்கினர். அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதுகுளத்தூரில் முதலுதவி பெற்று மதுரை தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். தலை மற்றும் நெற்றியில் முருகனுக்கு 9 தையல் போடப்பட்டுள்ளது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் தன்னை குறிவைத்து தாக்கியவர்கள் குறித்து முருகன் இதுவரை புகார் அளிக்கவில்லை. தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட தகவலின்படி, எஸ்ஐ முருகனுக்கு முன்விரோதம் ஏதும் இல்லை. ஏற்கனவே திருமணமான அவருக்கு அப்பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் அப்பெண்ணின் உறவினர்கள் திட்டமிட்டு செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முருகன் புகார் அளிக்காத போதும், போலீசார் தாமாக முன்வந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.