யார் யாருக்கு ஊழலில் தொடர்பு மாணவர்களிடம் விசாரணை | periyar university | DDUGKY Scam
திறன் மேம்பாட்டு பயிற்சி நிதி 2.5 கோடி ரூபாயில் ஊழல்! பெரியார் பல்கலையில் அனல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா திட்டத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் நிதியில் ஊழல் நடந்ததாக, அத்திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களே புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், தேசிய பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நல ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளனர். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், திட்ட பொறுப்பாளர் சசிகுமார் உட்பட பேராசிரியர்கள் சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக புகாரில் மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த புகார் மீது விசாரணை நடத்தி வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சேலம் போலீஸ் கமிஷனருக்கு தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.