/ தினமலர் டிவி
/ பொது
/ இளைஞரை வழிமறித்து தாக்கி பைக் பறிப்பு: சென்னையில் அதிர்ச்சி | Perumbakkam Police
இளைஞரை வழிமறித்து தாக்கி பைக் பறிப்பு: சென்னையில் அதிர்ச்சி | Perumbakkam Police
திருவண்ணாமலையை சேர்ந்த அஜித்குமார் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தங்கி வேலை செய்து வருகிறார். செகண்ட் ஹேண்ட் கார் பற்றி விசாரிக்க வேளச்சேரி சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். சித்தாலப்பாக்கம் அருகே வந்த போது இரண்டு ஸ்கூட்டிகளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அஜித் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளினர். நிலை குழைந்து விழுந்து கிடந்தவரை பணம் கேட்டு தாக்கி உள்ளனர். கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடிய அஜித் அங்குள்ள கடைக்குள் புகுந்தார். அப்போது அவரது பைக் ரோட்டு ஓரமாக கிடந்த நிலையில் அதனை கும்பல் திருடி சென்றது.
நவ 17, 2025