உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெருங்களத்தூர் வரும் போதே மூச்சு முட்டும்: பயணிகள் வேதனை | Chengalpattu Train | Perungalathur

பெருங்களத்தூர் வரும் போதே மூச்சு முட்டும்: பயணிகள் வேதனை | Chengalpattu Train | Perungalathur

தினம் தினம் ஆபீஸ் போறதுக்கு உயிரை பணயம் வைக்கிறோம்! டிஸ்க்: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைவரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் செங்கல்பட்டு முதல், மறைமலை நகர் வரையுள்ள ஸ்டேஷன்களில் அதிக பயணிகள் ஏறுவதால் அனைத்து பெட்டிகளும் நிரம்பிவிடுகின்றன. அடுத்து கூடுவாஞ்சேரி ஸ்டேஷனில் இருந்து ஏறும் பயணிகளுக்கு இடமே கிடைப்பதில்லை. திங்கட்கிழமை மற்றும் சில விசேஷ நாட்களில் ரயில் பெட்டிக்குள் ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கிறது. குறிப்பாக பெருங்களத்தூர் ஸ்டேஷனில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் படியில் தொங்கிக்கொண்டு போக வேண்டி உள்ளது. இதனால் செங்கல்பட்டு - தாம்பரம் வரை காலை 7 முதல் 9 மணி வரை குறைந்தது 3 அல்லது 4 மின்சார ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் 3வது ரயில் பாதை தயார் நிலையில் உள்ளதால் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்கலாம் என்கின்றனர் பயணிகள்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை