/ தினமலர் டிவி
/ பொது
/ எலி மருந்து நெடி எமனானது எப்படி? டாக்டர் சொன்ன உண்மை | pest control issue | chennai pest control
எலி மருந்து நெடி எமனானது எப்படி? டாக்டர் சொன்ன உண்மை | pest control issue | chennai pest control
எலியை கொல்ல பயன்படுத்திய மருந்தின் நெடி தாங்க முடியாமல் சென்னையில் 2 குழந்தைகள் இறந்த சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. அதை கட்டுப்படுத்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்திடம் உதவி கோரினார். கிரிதரன் வீட்டுக்கு வந்த நிறுவன ஊழியர்கள் எலியை கொல்வதற்கு மருந்து வைத்து விட்டு சென்றனர். மருந்தில் இருந்து வெளியான நெடி தாங்க முடியாமல் கிரிதரன் குடும்பம் மூச்சுத்திணறி உயிருக்கு போராடியது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிரிதரன் குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நவ 16, 2024