கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க அனுமதிகோரி டிஜிபியிடம் மனு! karur stampede | vijay video
#Petition #TNpolice #Permission #KarurStampede #TVKVijayIssue #VijayVideoCall #KarurTragedy #KarurNews #VijayUpdates #BreakingNews #VijayFans #TamilNadu #NewsAlert #VijayVideos #CurrentEvents #KarnatakaNews #SocialJustice #PublicSafety #TrendingNow #VijayLive கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அனைத்து கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் விஜய் இதுவரை கரூர் செல்லவில்லை. சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்காமல் சென்னை சென்றார் என கடும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் நேற்று கரூரில் இறந்தவர்கள் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசினார். நடக்க கூடாத துயர சம்பவம் நடந்து விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். இப்படியொரு சம்பவம் நடந்திருக்க கூடாது என வருத்தம் தெரிவித்தார். இதற்கிடையே பல்வேறு கட்சியினர் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்காதது குறித்து விமர்சித்தனர். சென்னை ஐகோர்ட்டும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.