உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளக்குறிச்சி விசாரணையில் திருப்பம்; திமுக தொடர்பு அம்பலம் | kallakurichi hooch tragedy | cbcid

கள்ளக்குறிச்சி விசாரணையில் திருப்பம்; திமுக தொடர்பு அம்பலம் | kallakurichi hooch tragedy | cbcid

திமுக பிரமுகர் பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனால் சிக்கியது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை விற்ற மாதேஷ், சின்னதுரை உட்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையமும் விசாரணை நடந்து வருகிறது. கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 4 மாதங்களாக கெமிக்கல் கம்பெனிகளிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதை கள்ளச்சாராயம் தயாரிப்புக்காக விற்று வந்தேன். கள்ளக்குறிச்சி பகுதியிலும் மெத்தனால் விற்றேன். பெரிய அளவில் பிசினஸ் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் நிறைய பேர் இறந்ததால் மாட்டிக் கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் செயல்படாத ஒரு பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து, அங்கு மெத்தனாலை பதுக்கி வைத்ததாகவும் மாதேஷ் வாக்குமூலம் அளித்தார். சிபிசிஐடி போலீசார் உடனே அந்த பெட்ரோல் பங்கில் அதிரடி சோதனை நடத்தினர். தரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ள டேங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ