சென்னை, டில்லியை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்
#PetrolDieselPriceinIndia #PetrolPriceinDubai #DubaiCurdeOilPrice #DieselPriceinDubai பொதுவாக எரிபொருள் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளில், பெட்ரோல், டீசல் விலை உலகின் பிற நாடுகளை விட குறைவாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. எந்தப் பொருளாக இருந்தாலும், அப்பொருள் உற்பத்தியாகும் நாட்டில் அதன் விலை குறைவா இருப்பது இயல்பே. ஆனால், தற்போது, சில்லறை விலை எரிபொருள் விற்பனையில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் எரிபொருளின் விலை குறைவாக உள்ளது. நேற்றைய நிலவரப்படி துபாயில் ஸ்பெஷல் 95 ரக பெட்ரோல், லிட்டருக்கு 110.04 ரூபாய்க்கு விற்பகப்பட்ட நிலையில், டில்லியில் 102.12 ரூபாய்க்கு விற்பனையானது. இது துபாயை விட 7.82 ரூபாய் குறைவு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107.76 ரூபாய்க்கு விற்பனையானது. அப்படிப்பார்த்தால், துபாயை விட சென்னையில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. டீசலை பொறுத்த வரை விலை வித்தியாசம் இன்னும் அதிகமாக உள்ளது. துபாயில் டீசல் விலை லிட்டருக்கு 123.41 ரூபாயாக உள்ள நிலையில் டில்லியில் ஒரு லிட்டர் டீசல், 95.20 ரூபாய்க்கு விற்பனையானது. இது லிட்டருக்கு, 28.21 ரூபாய் குறைவாகும். சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 99.55 ரூபாயாக உள்ளது. கடந்த 1ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில், எரிபொருள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தால், உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்துள்ள நிலையில், துபாயை விட இந்தியாவில் எரிபொருள் குறைவான விலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.