பிஎப் திட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத பெரிய மாற்றம் PF new updates| PF rules |new pf rules 2026
பிஎப் திட்டத்தில் ஊதிய உச்சவரம்பை 15,000ல் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒருவர் 50,000 ரூபாய் மாத ஊதியம் பெற்றாலும், 15,000 ரூபாய் அடிப்படையில் தான் 12 சதவீத தொகை சந்தாவாக பிடிக்கப்படும்; நிறுவனமும் அதே அளவுக்கு பணம் செலுத்தும். இது கடந்த 10 ஆண்டுகளாக அமலில் உள்ள நிலையில், உச்ச வரம்பை அதிகரிக்க பரிசீலிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது; தொழிலாளர் நல சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. அதேபோல், இஎஸ்ஐ பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு 21,000 ரூபாயாக உள்ள நிலையில், அதையும் அதிகரிக்க கோரிக்கை உள்ளது. இதையடுத்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், பிஎப் மற்றும் இஎஸ்ஐ இரண்டுக்கும் ஒரே சீரான ஊதிய வரம்பை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. பணவீக்கம், தொழிலாளர்களின் செலவினங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, உச்சவரம்பை 25,000 முதல் 30,000 ரூபாய் வரை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் ஊழியருக்காக செலுத்தும் 12 சதவீத தொகை அதிகரிக்கும் என்பதால், தொழிலாளரின் ஓய்வூதிய தொகையும், மொத்த சேமிப்பும் அதிகரித்து ஓய்வுக்காலத்தில் பயன் கிடைக்கும்.