கலவரங்கள் மூலம் இந்தியாவை துண்டாடிய PFI | Civil War | Popular Front of India
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது PFI எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு. 2006ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் கேரளா, தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள் இணைந்தன. 22 மாநிலங்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டு வந்தது. டெல்லி ஷாகின் பாக் போராட்டம், பெங்களூரு கலவரம், உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ், சஹ்ரான்பூர் கலவரத்தில் PFI மீது குற்றம் சாட்டப்பட்டது. கேரளா உட்பட பல மாநிலங்களில் மதரீதியாக நடந்த கொலைகளின் பின்னணியில் PFI அமைப்பின் நிர்வாகிகள் இருந்தனர். இதையடுத்து 2022ல் நாடு முழுவதும் பிஎப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. பிஎப்ஐ அமைப்பினர் சட்டவிரோத செயல்கள், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது அம்பலமானது. 2022 செப்டம்பர் 28ல் பிஎப்ஐ அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதையடுத்து பிஎப்ஐ அமைப்பின் சட்டவிரோத பணப பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. விசாரணை முடிவில் அமலாக்கதுறையினர் வெளியிட்ட அறிக்கை திடுக்கிட வைத்துள்ளது. அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனிநபர்கள் பெயர்களில் இருந்த பிஎப்ஐ அமைப்பின் 35 அசையா சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 56 கோடி ரூபாயாகும்.