/ தினமலர் டிவி
/ பொது
/ பல்கலைகளில் பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது CUET PG Results Out| NTA Exam
பல்கலைகளில் பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது CUET PG Results Out| NTA Exam
நாடு முழுவதும் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான CUET பொது நுழைவுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தது. 6 லட்சத்து 54 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வர்கள் NTAவின் வெப்சைட்டில் தங்கள் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவர்கள் விரும்பும் பட்ட மேற்படிப்புகளில் சேர முடியும்.
மே 06, 2025