உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! | Pillur Dam | BhavaniSagar Dam

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! | Pillur Dam | BhavaniSagar Dam

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில் வனப்பகுதியில் உள்ளது பில்லூர் அணை இதன் நீர்மட்ட உயரம் 100 அடி. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை அமைந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நள்ளிரவு 2:30 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான 97 அடியை எட்டி அணை நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நான்கு மதகுகள் வழியாக தலா 2 ஆயிரம் கன அடி, மின்சாரம் உற்பத்தி செய்ய 6000 கன அடி என மொத்தம் 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பில்லூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியதால் பவானிசாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 85 அடியை நெருங்கியுள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. அணைக்கு நீர்வரத்து இபோது 13,600 கனஅடியாக உள்ளது.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை