உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாட்டில் தொடரும் தொலைந்தவர்களை தேடும் பணி | Pinarayi Vijayan | Kerala CM | Wayanad land slide

வயநாட்டில் தொடரும் தொலைந்தவர்களை தேடும் பணி | Pinarayi Vijayan | Kerala CM | Wayanad land slide

இப்போதைக்கு யாரும் வயநாட்டுக்கு வராதீங்க பினராயி வைத்த கோரிக்கை கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 180ஐ கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல் படையினர் தேடுதல் - மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இந்த பணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில், கேரள முதல்-வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மீட்பு குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார். நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், நிவாரண உதவிகளை வரவேற்றுள்ளார். அதேசமயம் வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர வேறு யாரும் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மீட்பு பணிக்கு இடையூறாக பார்வையாளராக நிற்கும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். பேரிடர் பகுதிகளுக்கு வாகனங்களில் தேவையில்லாமல் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவர்களால் மீட்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்களின் போக்குவரத்து, மீட்பு பணிகள் பாதிக்கிறது. இதை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாக உணர்நது அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ