பல்கலைக்கழகத்தில் அலசி ஆராய மாநில அமைச்சருக்கு அதிகாரம்
கேரள அரசால் முன்மொழியப்பட்ட பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, சர்ச்சைக்குரிய விவாதங்களை எழுப்பி இருக்கிறது. இந்த மசோதாவில் உள்ள ஒரு முக்கிய விதி, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாநில அரசின் சட்டங்கள், பல்கலைக்கழக கொள்கைகளை விமர்சிக்க தடை விதிக்கிறது. கல்வி நிறுவன வளாகங்களில் விநியோகிக்கப்படும் எந்த வகையிலான விளம்பர பொருட்களும் மாநில அரசின் சட்டங்கள், கொள்கைளுக்கு எதிரானதாக இருக்க கூடாது. அதே சமயம் மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்ய திருத்த மசோதா அனுமதிக்கிறது.
மே 20, 2025