உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெஞ்சுவதற்கு இதென்ன காங்கிரஸ் ஆட்சியா? ராகுலுக்கு பியூஸ் நெத்தியடி Piyush goyal on Us trade|Rahul

கெஞ்சுவதற்கு இதென்ன காங்கிரஸ் ஆட்சியா? ராகுலுக்கு பியூஸ் நெத்தியடி Piyush goyal on Us trade|Rahul

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி (reciprocal tariff) விதித்தது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல்வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் கூறினார். பின்னர் இந்த உத்தரவை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அந்த கெடு வரும் ஜூலை 9-ல் முடிகிறது. இதற்கிடையில், இந்தியா- அமெரிக்கா இடையே பரஸ்பர வரி தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இச்சூழலில், எந்த காலக்கெடுவை நோக்கியும் நாங்கள் செயல்படவில்லை. தேச நலனை நோக்கியே செயல்படுகிறோம் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கூறினார். இது பற்றி பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், டிரம்பின் கால கெடுவுக்கு மோடி அமைதியாக பணிந்து போவார். குறித்து வைத்து கொள்ளுங்கள் என்றார். ராகுலின் விமர்சனத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்தார். எந்த காலக்கெடுவுக்கு பயந்தும் இந்தியா செயல்படாது. நாட்டு நலனை மனதில் வைத்தே அமெரிக்காவுடன் பேச்சு நடத்துகிறோம். மோடி அரசு வந்த பிறகு மொரிஷியஸ், ஒன்றுபட்ட அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளுடன் சுதந்திரமான முறையில் வர்த்தக ஒப்பந்தகள் செய்திருக்கிறோம். இன்று இந்தியா வலிமையான நிலையில் இருந்து பேச்சு நடத்துகிறது. நாங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். எங்களால் உலகில் உள்ள எவருடனும் போட்டி போட முடியும். இது ஒன்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா இல்லை. அதுதான் தேச நலனை பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கு கெஞ்சும். ராகுல், அவருடைய கட்சி மற்றும் சகாக்கள் எதிர்மறை விஷயங்களையே பரப்புகின்றனர். இதனால் ராகுலை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

ஜூலை 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K V Ramadoss
ஆக 30, 2025 20:55

Who will take the clown seriously...


raju
ஜூலை 14, 2025 08:48

ஆமாம்.. ராகுல் எமெர்கெனசி வார்ட்ல இருக்கிறார்.. நெத்தியடியால்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி