உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெற்கு சூடானில் தொடரும் விமான விபத்துகளால் அச்சம் | Plane crash | Mechanical collision suspected

தெற்கு சூடானில் தொடரும் விமான விபத்துகளால் அச்சம் | Plane crash | Mechanical collision suspected

புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் 20 பேர் மரணம் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட்டில் உள்ள ஆயில்பீல்டு ஏர்போர்ட்டில் இருந்து அட்ராஜிக் என்ற சிறிய விமானம் பயணிகள் உட்பட 21 பேருடன் ஜூபாவுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம், திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 20 பேர் அதே இடத்தில் இறந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், GPOC எனும் கிரேட்டர் பயனீர் நிறுவனத்தைச் சேர்ந்த எண்ணெய் தொழிலாளர்கள். விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாக யூனிட்டி ஸ்டேட் தகவல் துறை அமைச்சர் கேட்வேச் பிபால் கூறினார். பலியானவர்களில் தெற்கு சூடானை தவிர சீனா, இந்தியாவை சேர்ந்தவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இயந்திர கோளாறால் விபத்து நடந்ததாக சொல்லப்படும் நிலையில், முழுமையான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை