உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யாவில் விமானம் தரையிறங்க முயன்றபோத என்ன நடந்தது? plane crash| putin apologises to azerbaijan lea

ரஷ்யாவில் விமானம் தரையிறங்க முயன்றபோத என்ன நடந்தது? plane crash| putin apologises to azerbaijan lea

கிறிஸ்துமஸ் தினத்தன்று, அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தது. மொத்தம் 62 பேர் இருந்தனர். க்ரோஸ்னி ஏர்போர்ட்டை விமானம் நெருங்கி கொண்டிருந்த சமயத்தில் தரையிறங்க ரஷ்யா அனுமதி தரவில்லை. வேறு விமான ஏர்போர்ட்டில் இறங்க அறிவுறுத்தியது. கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் நகர் ஏர்போர்ட்டில் தரையிறங்க இருந்தபோது, திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் 38 பேர் இறந்தனர். 29 பேர் உயிர் தப்பினர். விமானத்தில் ஏவுகணைகள் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா சண்டையில், உக்ரைன் வீசிய ஏவுகனைதான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சூழலில், இந்த சோகமான சம்பவத்திற்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த புடின், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக கூறியுள்ளார். இதனை ரஷ்யா அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் பயணிகள் விமானம், ரஷ்யாவின் க்ரோஸ்னி ஏர்போர்ட்டில் தரையிறங்க முயற்சித்தது.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை