சிறுபான்மையினரின் மத உரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு Plea against Waqf Board act| Case against w
வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடுகளை தடுக்கவும், அதன் சொத்துக்களை முறையாக பராமரிக்கவும், வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. எதிர்கட்சிகள் சொன்ன திருத்தங்களும் செய்யப்பட்ட பின், மசோதா நிறைவேறியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் காங்கிரஸ், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. அந்த கட்சியின் லோக்சபா எம்பி முகமது ஜாவித் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அதில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முஸ்லிம்களின் அடிப்படை மத உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மத சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கும் செயல் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசியும் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகே சட்ட வடிவம் பெறும். ஆனால், அதற்கு முன்பே காங்கிரஸ் மற்றும் ஒவைசி மசோதவை எதிர்த்து வழக்கு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.