உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 443 மார்க் எடுத்த மாணவன்; கண்ணீரில் மூழ்கிய குடும்பம் plus 2 results state board dindigul student

443 மார்க் எடுத்த மாணவன்; கண்ணீரில் மூழ்கிய குடும்பம் plus 2 results state board dindigul student

திண்டுக்கல் மாவட்டம் மல்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன், அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சுகுமார் (18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்தார். தேர்வு எழுதி முடித்து விட்டு ரிசட்டுக்காக காத்திருந்த சுகுமார், கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்றார். காய்கறி வாங்கிக்கொண்டு ஊருக்கு திரும்பும் போது, பைக் மீது ஆட்டோ மோதியது. ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அங்கு 15 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது. சுகுமார் 600க்கு 443 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். சுகுமாரை நினைத்து குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கினர். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தான். எல்லாமே கலைந்து போய் விட்டது என சோகத்துடன் கூறினர்.

மே 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி