வலுவடையும் இந்தியா-வெனிசுலா உறவு! PM Modi | Delcy Rodriguez | State Visit | Delhi
5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் உள்ள தடங்கல்களை சமாளிக்க வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது, எரிசக்தி கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் வர்த்தகம், முதலீடு, மருந்து பொருள்கள், சுகாதாரம், வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலான துறைகளில் கூட்டாக சேர்ந்து பயணிப்பது பற்றியும் பேசப்பட்டது. தெற்குலக நாடுகளின் நலன்களை முன்னெடுப்பது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் திட்டப்படி வெனிசுலா அதிபரும், அவரது குழுவும் நாளை முதல் பல்வேறு தொழில் நிறுவனங்களைப் பார்வையிட உள்ளனர். வரும் ஜூன் 7ம் தேதி அவர் வெனிசுலா திரும்புகிறார். #PMModi#DelcyRodriguez#IndiaVenezuela#BilateralTalks#StateVisit