ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் : பிரதமர் மோடி பேச்சு PM Modi | Diwali | Indian Army | Chhattisga
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிந்தார். அப்போது அவர் பேசியதாவது: நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம். நக்சல்களுக்கு எதிராக போரிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பஸ்தர் பகுதி நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்தது. இப்போது, அவர்களின் பிடியில் இருந்து இந்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. இங்கு நக்சல்கள் கொல்லப்பட்டதை விட, நமது ராணுவ வீரர்களே அதிகவில் வீரமரணம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சியை சேர்ந்த எந்த ஒரு தலைவரும் நமது வீரர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை. நக்சல் ஆதிக்கத்தால் 230 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. கடந்த 47 ஆண்டுகளில் முதல் முறையாக புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. கடந்த ஓராண்டாக இங்கு எந்த ஒரு ராணுவ வீரரும் இறக்கவில்லை. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நக்சல் ஒழிக்கப்பட்டு கொண்டாடும் முதல் தீபாவளி இதுவாகும். 2014ம் ஆண்டுக்கு பிறகு, ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டு வருகிறது. நமது எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதே நமது நோக்கம் என்று பிரதமர் மோடி கூறினார் #PMModi #DiwaliWithJawans #BastarDiwali #NaxalismEnded #IndianArmyJawans #ModiSlamsOpposition #ChhattisgarhVisit #NationalSecurity #DinamalarNews